tam

 

 

 

அறிமுகம்


அழகான மலைகள் நிறைந்த பூமியைக் கொண்ட கண்டி மாவட்டம் 1940 சதுர கிலோ மீட்டர் அடங்கிய பூமியினால் மூடப்பட்டிருக்கும் மனோரம்மியமான உக்குவெல, ரத்தோட்டை, லக்கல, பல்லேகம மற்றும் வில்கமுக பிரதேச செயலாளர் அலுவலகங்களினதும் கிழக்குத் திசையில் பதுளை மாவட்டத்தின் மஹியங்கனை பிரதேச செயலாளர் பிரிவிலும் தெற்கில் பதுளை மாவட்டத்தின் கந்தகெட்டிய மற்றும் நுவரெலியா மற்றும் அம்பகமுவ கோரளை ஆகிய பிரதேச பிரிவுகளாலும் மேற்கில் கேகாலை மாவட்டத்தின் அரநாயக்க புலத்கொஹூபிட்டிய மாவனெல்ல மற்றும் ரம்புக்கனை ஆகிய பிரதேச செயலாளர் பிரிவுகளாலும் குருணாகல் மாவட்டத்தில் மாவத்தகம மற்றும் ரிதிகம பிரதேச செயலாளர் பிரிவுகளாலும் எல்லைகளைக் கொண்ட கண்டி மாவட்டம் வடக்கில் 60.56, 70.29 பாகையிலும் கிழக்கில் 80.25, 80.0 பாகையிலும் அமைந்துள்ளது.

சரித்திர பின்னணி
ஒரு அபிமானமுள்ள சரித்திரத்திற்கு உரிமைகோரும் கண்டி பிரதேசம் அனுராதபுரம், பொலன்னருவை காலத்தில் மலையகத்துக்கு                                                                                                                                                                                                                                                                                      சொந்தமாகி இருந்ததுடன் கம்பளை ஆட்சி காலத்தில் மூன்றாவது விக்ரமபாகு அரசர் காலத்தில் ஒரு நகரமாக அபிவிருத்தி செய்யப்பட்டதென கதைகளில் கூறப்படுகிறது. செங்கடகல நுவர என்ற பெயரில் விளங்கிய கண்டி இராச்சியத்தின் முதலாவது விமலதர்மசூரிய அரசரால் சிங்கள  ராஜதானியின் தலைநகரமாகக் கருதிய அலங்காரமிக்க தலதா மாளிகையும் அரச மாளிகை உட்பட சகல பிரிவுகளையும் உட்படுத்தி ஒரு முழுமை மிக்க நகரமாக ஆக்கப்பட்டது. அன்று தொடக்கம் 3  நூற்றாண்டு காலங்கள் போர்த்துகேயர், ஒல்லாந்தர் மற்றும் ஆங்கிலேயர் ஆகிய மேற்கிந்தியர்களிடமிருந்து பரிசுத்தமான புத்த சமயத்தையும் சிங்கள கலாசாரத்தையும் பாதுகாத்துக் கொண்டு 1815 ம் ஆண்டு மார்ச் மாதம் 02ம் திகதி வரை சிங்கள ராஜதானியின் தலைநகரமாக செங்கடகல புரம் நிலையாக நடைபெற்றது. கரையோரப் பகுதிகள் மேற்கிந்திய இனத்தவரை ஆட்சி செய்த காலத்தில் அவர்களால் கண்டி இராஜதானியில்  இடைக்கு இடை ஏற்பட்ட ஆக்கிரமிப்புகளுக்கு எதிராக நடைபெற்ற வெற்றிகரமான பல யுத்தங்கள் கண்டியை மையமாக வைத்து நடைபெற்றன. இரண்டாவது ராஜசிங்ஹ அரசர் காலத்தில் பேராதனை, கன்னொருவை மற்றும் யட்டிநுவர, தந்துரேயில் நடைபெற்ற யுத்தங்களின் போது வெளிநாட்டிலிருந்து ஆக்கிரமித்த இராணுவர்கள் முமு                                                                                                                                                    மையாக நாசமாக்கப்பட்டார்கள். வெளிநாட்டவர்களிடமிருந்து சிங்கள இராஜதானியை பாதுகாத்துக் கொள்வதற்கு உதவிபுரிந்த ஒரு பிரதான கோட்டையாக  தற்போது கடுகண்ணாவை நகரத்திற்கு அண்மையில் அமைந்திருந்த “பலன” கோட்டை  அமைந்துள்ளது.
1815ம் ஆண்டு மார்ச் மாதம் 02ம் திகதி கண்டி (மகுல் மடுவ) திருமண மண்டபத்தில் கையொப்பமிடப்பட்ட “உடரட்ட ஒப்பந்தம்” மூலம் இலங்கையின் ஆட்சி ஆங்கிலேயர் கைப்பற்றிக் கொண்டதுடன் நாட்டின் தலைநகரமாக கொழும்பு இருந்தாலும் நாட்டின் பிரதான நகரமாக கண்டி நகரமே கருதப்பட்டது.
சிங்கள சரித்திரத்தின் இறுதி சுதந்திரப் புரட்சியாக 1818ம் ஆண்டில் ஊவ வெல்லஸ்ஸ யுத்தத்திற்குப் பதிலாக கண்டி பிரதேசத்தின் ரதல தலைவர்களில் அதிகமானோருக்கு தலைமைப் பதவி வழங்கப்பட்டுள்ளது. தனது பதவிகளை பின் வைத்து சுதந்திர யுத்தத்திற்காகப் போடாடிய மொனரவில, கெப்பெட்டிபொல ஆகிய தலைவர்களில் அதிகமானோரின் சொந்த நிலமாக இருந்ததும் கண்டி பிரதேசமே ஆகும்.  1818ம் ஆண்டில் சுதந்திரப் போராட்டத்தை மிகக் கொடூரமாக போராடி ஆங்கிலேயரால் கண்டி பிரதேசம் உட்பட மலைநாடும் பயிற்செய்கையும் மற்றும் வியாபாரத்தை மையமாக வைத்த ஒரு பொருளாதார நிலைக்குக் கொண்டு செல்லப்பட்டது. பெருந்தோட்ட பொருளாதாரத்தின் கீழ் முதலிலே இனங்கண்டு கொண்ட கோப்பி பயிற் செய்கை ஒரு நோயினால் நாசமாகியதுடன், இலங்கையிலே முதன்முதலாக நாட்டப்பட்ட தேயிலை மரம் தெல்தோட்டை பிரதேச செயலாளர் பிரிவில் லூல்கந்துர தோட்டத்தில் இன்றும் காண முடியும்.
சரித்திரப் பிரசித்தி பெற்ற இடங்கள்
முழு உலகத்திலேயே வசிக்கும் பௌத்த மக்களின் புனித ஸ்தலமான ஸ்ரீ தலதா மாளிகை கண்டி நகரத்திலே அமைந்துருப்பதுடன், சரித்திரப் பிரசித்தி பெற்ற பிரபல்யமிக்க பல முக்கிய இடங்கள் கண்டி மாவட்டத்தில்  அமைந்துள்ளன.
1.        கடலாதெனிய விகாரை
2.        எம்பெக்க கோவில்
3.        தெகல்தொருவை ரஜமகா விகாரை
4.        கல்மடுல ரஜமகா விகாரை
5.        தலாவ ரஜமகா விகாரை
6.        மெதமாநுவர போமுரே கம்மான மற்றும் ரஜகலகந்த
இவற்றுள் சில ஸ்தலங்கள் ஆகும்.

மற்றும் சுற்றாடல் காரணங்கள்
முக்கியமாக கடல் மட்டத்தில் இருந்து 100 மீட்டர் தொடக்கம் 1600 வரை உயரமுடைய மத்திய மலைநாட்டில் அமைந்திருக்கும் கண்டி மாவட்டத்தில் கிழக்குப் பகுதியில் அமைந்திருக்கும் மகாவலி ஆற்றிற்கு எல்லைகளாக கடல் மட்டத்திலிருந்து 100 மீட்டர் அளவில் உயரத்தில் அமைந்திருக்கும் தன்மையைக் கொண்டது. பொதுவாக வருடாந்த மழை 1840 மில்லிமீட்டராவதுடன் மாவட்டத்தில், கிழக்குப் பிரதேசமாகிய மினிப்பே பிரதேச செயலாளர் பிரிவு மலைநாடும் தாழ்ந்த பிரதேசமும் வரட்சி காலநிலையைக் கொண்டது. பொதுவான வெப்பம் 20-22 பாகையாவதுடன் முழு வருடத்திலும் குளிர்மையான காலநிலை வருடத்தில் அதிகமான பகுதியில் காணப்படும். பொதுவாக, தெல்தோட்டை, பஸ்பாகே கோரளை, கங்க இஹல கோரளை, உடதும்பறை, பன்வில ஆகிய பிரதேசங்களின் ஏனைய பிரதேசங்களுடன் வெப்பத்தை ஒப்பிடும் போது  குறைவையே காட்டுகிறது. வெப்ப வலயத்தில் அமைந்திருக்கும் மினிப்பே பிரதேசத்தில் ஒப்பிடும் போது கூடிய வெப்பம் காட்டப்படுகிறது. மகாவலி கங்கை மாவட்டத்திற்கு நடுவில் ஓடிச் செல்லும் பிரதான ஆறு ஆவதுடன் அது தூரத்திற்கு கிட்டத்தட்ட 110 கிலோமீட்டர் தூரம் கண்டி மாவட்டத்திற்கு அருகில் ஓடிச் செல்கிறது. மகாவலி கங்கையின் ஆரம்பம் ஹட்டன் ஆறும் கொத்மலை ஓடையும் ஒன்று சேர்ந்து மகாவலி கங்கை என்ற பெயரில் பஸ்பாகே பொல்வத்துர என்ற கிராமத்தில் ஓடுகிறது. இவ்வாறு ஓடிச்செல்லும் மகாவலி ஆற்றிற்கு  ஏனைய மாவட்டங்களில் இருந்து வடிந்து வரும் நீர் வழிகள் அதகமாக ஒன்று சேர்கிறது.
இதற்கு மேலதிகமாக தெதுரு ஓயவின் ஆரம்ப நீர் வழிகள் பூஜாபிட்டிய பிரதேச செயலாளர் பிரிவிலிருந்து ஆரம்பிக்கின்றது. மாவட்டத்தில் யட்டிநுவர மற்றும் உடுநுவர பிரதேச செயலாளர் பிரிவுகளில் மேற்கு பள்ளத்தாக்கில் நீரோடை ஒன்று சேர்ந்து ஓடிச் செல்கிறது.
மாவட்டத்தின் அருகில் அமைந்திருக்கும் பிரதான மலைத் தொடருக்கிடையில் உடதும்பரை, மெத்தும்பரை, மினிப்பே மற்றும் பன்வில ஆகிய பிரதேச செயலாளர் பிரிவுகளுக்குள் அமைந்துள்ள நகல்ஸ் மலைத் தொடர் மாவட்டத்தில் ஒரு விசேடமுள்ள சுற்றாடல் வலயமாகும். அங்கே பிரதான மலைத் தொடரான கொபோநிலகல (உயரம் மீட்டர் 1553.87) கோத்துலுகல (உயரம் மீட்டர் 1573.96) தும்பானகல (உயரம் மீட்டர் 1642.57) ஆகிய மலைத் தொடர்கள் கண்டி மாவட்டத்தில் அமைந்துள்ளன. பொதுவாக மழை ஆகக் கூடியதாக இருப்பதுடன், மகாவலி கங்கையிலும் மற்றும் அம்பன் கங்க பகுதி முக்கியமாக நீர் நிறைந்த பிரதேசமாகும். இலங்கைகே உரித்தான தாவரங்களுக்கும் மிருகங்களுக்கும் அடைக்கலம் கொடுப்பதும் நகல்ஸ்  மலைத் தொடர் ஆகும். கண்டி மாவட்டத்தில் இயற்கை அழகைக் கொண்ட பிரதேசமும் இதுவாகும்.
ஹந்தானை மலைத்தொடர், அம்புலுவாவ மலை, பலன மலைத்தொடர், அலகல்ல மலைகள் கண்டி மாவட்டத்தில் அமைந்திருப்பதுடன் கடியன்லென, கலபொட ஆகிய மனதைக் கவரும் பல நீர் வீழ்ச்சிகளும் கண்டி மாவட்டதில் அமைந்துள்ளன. இந்த நீர் வீழ்ச்சிகள் அனேகமானவை பிரசித்தி பெறாவிட்டாலும் இயற்கை அழகைக் கூட்டுவதில் ஒரு பெரிய பங்கை வகிக்கிறது. மாத்தளை மாவட்டத்திற்கு எல்லைகளாகிய மீமுரே கிராமத்திற்கு அருகில் நகல்ஸ் மலைத்தொடரில் அமைந்துள்ள “லக்கெகல” இடம் விசேடமாக உல்லாசப் பிரயாணிகள் விரும்பும் ஒரு அழகான இடமாகும்.
இயற்கை தாவரங்கள்
கண்டி மாவட்டத்தில் முழு பூமி அளவில் 41.521 ஹெக்ட்யார் அளவுள்ள காடு ஆகும். இப்பூமியின் அளவு முழு பூமி அளவில் நூற்றுக்கு 21 ஆகும். பாதுகாக்கப்பட்ட பிரதேசமாக பாதுகாக்க வேண்டிய காடுகளின் 23.317 ஹெக்ட்யார் பூமி காடாக இருந்தது. 10.759 சேக்ட்யார் திறந்த காடும் 7.445 ஹெக்ட்யார் காணியும் காட்டு மரம் வளர்ப்புக்காக ஒதுக்கப்பட்டுள்ளது. மலை உச்சிகளில் அதிகமான மரங்கள் காணக் கூடியதாக இருக்கும். இதன் காரணத்தினால் அப்பிரதேசம் நீரூற்றுக்கள் நிறைந்து பாதுகாப்பிற்காக இக்காடு மிகவும் பாதுகாத்துக் கொள்வதற்கு, ஒரு பாரிய தேவையாக இருந்ததுடன், மனிதர்களின் சில செயல்பாடுகளால், இதை நடாத்திச் செல்வதற்கு இடையூறு ஏற்படும் சந்தர்ப்பங்கள் பல உண்டு. நகல்ஸ் மலைத் தொடருக்குரிய பெரிய பூமி கண்டி மாவட்டத்திற்குரியதாகும். இலங்கைக்கே உரித்தான தாவரங்களும் சில மிருகங்களுக்கு வசிப்பிடமாகிய இவ் வலயம் கடும் இயற்கைப் பாதுகாப்பு பிரதேசமாக பெயர் குறிப்பிடப்பட்டுள்ளது. ரன்தெனிகல, ரன்டெம்பே பிரதேசங்களு இம் மாவட்டத்திற்குரியதாகும். ஹந்தானை மலைத்தொடரும் கடும் சுற்றாடல் பாதிப்பிற்குட்பட்ட பிரதேசமாகும். ஹந்தானை பிரதேசம் உயர் பாதுகாப்பு சுற்றாடல் வலயமாக அரசாங்கத்தினால் 2010ம் ஆண்டில் கெஸட் வர்த்தமானி மூலம் அறிவிக்கப்பட்டது.
காட்டு மிருகங்கள்
கண்டி மாவட்டத்தில் காடுகளுக்கு அண்மையில் காட்டு மிருகங்கள் வசிக்கின்றன. யானை, சிறுத்தைப் புலி, குரங்கு, மந்தி, காட்டுப்பன்றி, மான் இதற்குள் முக்கிய இடத்தை வகிக்கும்.
உடதும்பறை, மினிப்பே ஆகிய பிரதேசங்களில் காட்டு யானைகள் காணப்படுவதுடன், ரன்தெனிகல சாரணாலயத்திற்கு அண்மையில் நிரந்தரமாக காட்டு யானைகள் காணப்படுகின்றன. இப்பிரதேசங்களில் பரந்த காட்டிற்குள் சிறுத்தைப் புலிகள் வசிப்பதுடன் கம்பளை, ஹந்தானை, பாத்தஹேவஹெட்ட, மீமுரே ஆகிய பிரதேசங்களில் சிறுத்தைப் புலிகளைப் பற்றி கூறப்படுகிறது. மாவட்டத்தில் எல்லா பிரதேசங்களிலும் காடுகளுக்கு அண்மையில் மந்திகள், குரங்குகள் காட்டுப் பன்றிகள் வசிப்பதுடன் ரந்தெனிகல பாதுகாக்கப்பட்ட பகுதியில் புள்ளி மான்கள், மரைகள் ஆகிய மிருகங்கள் காணப்படுகின்றன. இதற்கு மேலதிகமாக விசேடமான பட்சிகளும் இப்பிரதேசத்தில் வசிக்கின்றன.

செய்தி மற்றும் நிகழ்வுகள்